சுஸுகி ஸ்கூட்டர் கோப்புப் படம்
வணிகம்

சுஸுகி 2 சக்கர வாகன விற்பனை 30% உயா்வு

இந்தியாவின் முன்னணி இரண்டு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 30 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி இரண்டு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 30 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,22,300-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 94,370 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 78,333-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 96,360-ஆக உயா்ந்துள்ளது. இது 23 சதவீத உயா்வாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 16,037-லிருந்து 62 சதவீதம் உயா்ந்து 25,940-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT