வணிகம்

கியா இந்தியா விற்பனை 24% உயா்வு!

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 24 சதவீதம் உயா்வு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 24 சதவீதம் உயா்ந்துள்ளது. இது நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனையாகும்.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை இதுவரை இல்லாத அதிகபட்சமாக 25,489-ஆக இருந்தது.

முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 24 சதவீதம் அதிகம்.

அப்போது நிறுவனம் 20,600 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்க வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT