மடிக்கணினி 
வணிகம்

மடிக்கணினி இறக்குமதி கோருவதற்கான இணையதளம் டிசம்பர் 22ல் திறப்பு!

மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட ஐடி மென்பொருள் இறக்குமதிக்கான அங்கீகாரம் கோருவதற்கான இணையதளம் டிசம்பர் 22 ஆம் தேதியன்று திறக்கப்படும்.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட ஐடி மென்பொருள் இறக்குமதிக்கான அங்கீகாரம் கோருவதற்கான இணையதளம் டிசம்பர் 22 ஆம் தேதியன்று திறக்கப்பட்டு, சுமார் ஒரு வருடம் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட ஐடி மென்பொருளுக்கான இறக்குமதி மேலாண்மை அமைப்பை செயல்படுத்துவதற்கான விரிவான நடைமுறையை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்படும் எந்தவொரு அங்கீகாரமும் டிசம்பர் 31, 2026 வரை செல்லுபடியாகும். அதே வேளையில், இறக்குமதியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகளை இறக்குமதி செய்து வரும் நிலையில், அங்கீகாரத்தின் காலத்தில் செல்லுபடியாகும் எந்தவொரு திருத்தங்கள் மற்றும் கோரிக்கையும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரூ.1.6 லட்சம் கோடி இழப்புடன் வர்த்தகம் நிறைவு!

The portal to seek authorisation for imports of IT hardware including laptops, tablets, will open on December 22 and remain operational for about one year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரு தேஜ் பகதூரின் தியாகம் மதச் சுதந்திரத்துக்கு அடையாளம்: சி.பி.ராதாகிருஷ்ணன்

இளம் வயதினரை நாட்டின் வளா்ச்சிக்கு தயாா்படுத்த தரமான கல்வி அவசியம்: தலைமை பொருளாதார ஆலோசகா்

திரிகூடபுரத்தில் குடிநீா்த் தொட்டி சேதம்: போலீஸ் விசாரணை

குறிப்பன்குளத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

சீதபற்பல்லூரில் மின் சிக்கன விழிப்புணா்வுக் கருத்தரங்கு

SCROLL FOR NEXT