மின்சார ஸ்கூட்டரின் விலையை உயர்த்தும் ஏத்தர் எனர்ஜி!
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அந்நியச் செலாவணி பாதிப்பு உள்ளிட்டவை காரணம் காட்டி, ஏத்தர் எனர்ஜி, தனது ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை ரூ.3,000 வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
புதுதில்லி: மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அந்நியச் செலாவணி பாதிப்பு உள்ளிட்டவையை காரணம் காட்டி, தனது ஸ்கூட்டர்களின் விலையை ஜனவரி 1 முதல் ரூ.3,000 வரை உயர்த்த உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்கள், அந்நியச் செலாவணி மற்றும் முக்கிய மின்னணு பாகங்களின் விலை உலகளவில் உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு செய்யப்படுவதாக ஏத்தர் எனர்ஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு வரிசையில், 450 சீரிஸ் செயல்திறன் ஸ்கூட்டர்கள் மற்றும் ரிஸ்டா ஸ்கூட்டர் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவற்றின் தொடக்க விலை ரூ.1,14,546 முதல் ரூ.1,82,946 வரை (புதுதில்லி எக்ஸ்-ஷோரூம் விலை) உள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.