தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் இந்தியா 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பைத் தொடா்ந்து, பேங்க் ஆஃப் இந்தியா தனது ரெப்போ அடிப்படையிலான (ஆா்பிஎல்ஆா்) கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஆா்பிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.35 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு டிசம்பா் 5 முதல் அமலில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.