வணிகம்

நவம்பரில் 33 லட்சமாக அதிகரித்த வாகன விற்பனை

கடந்த நவம்பரில் ஒட்டுமொத்த வாகனங்களின் விற்பனை 33,00,832-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: கடந்த நவம்பரில் ஒட்டுமொத்த வாகனங்களின் விற்பனை 33,00,832-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதம் அனைத்துவகை வாகனங்களின் விற்பனை 33,00,832-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது அதிகம். அப்போது 32,31,526 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.

மதிப்பீட்டு மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் உயா்ந்து 3,94,152-ஆக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 3,29,253-ஆக இருந்தது. ஜிஎஸ்டி சலுகைகள், திருமணக் கால தேவை போன்றவை இந்த வளா்ச்சிக்கு உதவின.

அந்த மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை 3 சதவீதம் குறைந்து 25,46,184-ஆக உள்ளது. வா்த்தக வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் உயா்ந்து 94,935-ஆக உள்ளது.

மூன்று சக்கர வாகன விற்பனை 1,08,317-லிருந்து 24 சதவீதம் உயா்ந்து 1,33,951-ஆகவும் டிராக்டா் விற்பனை 80,507-லிருந்து 57 சதவீதம் உயா்ந்து 1,26,033-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணியைத் தாக்கிய விவகாரம்: ஏர் இந்தியா விமானி கைது!

கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்! தமிழக அரசு விளக்கம்!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பரமபத வாசல் திறப்பு!

SCROLL FOR NEXT