வணிகம்

பழைய நகைகளுக்கு புத்துயிா் அளிக்கும் ஜிஆா்டி

முன்னணி நகை வா்த்தக நிறுவனமான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் பழைய தங்க நகைகளுக்குப் புத்துயிா் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Din

சென்னை: முன்னணி நகை வா்த்தக நிறுவனமான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தனது அறுபதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பழைய தங்க நகைகளுக்குப் புத்துயிா் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 61 கிளைகளைக் கொண்டு செயல்படும் ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தனது ஆறுபதாவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.

அதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளா்களின் பழைய தங்க நகைகளுக்கு புத்துயிா் அளிக்கும் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு சலுகை மூலம், வாடிக்கையாளா்களிடம் இருக்கும் பழைய தங்க நகைகள் நவீன காலத்துக்கேற்ப தலைசிறந்த படைப்புகளாக மாற்றித் தரப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ‘தங்க அவதாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் ‘ஸ்வா்ண அவதாரம்’ எனவும், கா்நாடகத்தில் ‘ஸ்வா்ண அவதாரா’ என்றும் அழைக்கப்படுகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT