PTI Graphics
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து 87.46 ரூபாயாக முடிவு!

உலகளாவிய வர்த்தகப் போர் கவலைகள் முதலீட்டாளர்களிடையே வெறுப்பைத் தூண்டியதால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிந்தது.

DIN

மும்பை: உலகளாவிய வர்த்தகப் போர் கவலைகள் முதலீட்டாளர்களிடையே வெறுப்பைத் தூண்டியதால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிந்தது.

உலகளாவிய வர்த்தகப் போரில் இந்திய ரூபாய் எதிர்மறையான சார்புடன் வர்த்தகம் ஆவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 10 சதவிகித வரி விதித்து டிரம்ப் தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று சீனா சில அமெரிக்க தயாரிப்புகள் மீது வரிவிதிப்புகளை அறிவித்ததன் மூலமாகவும், கூகுள் மீது நம்பிக்கையற்ற விசாரணையை அறிவித்ததன் மூலமாகவும் பதிலடி கொடுத்தது வருகிறது.

இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் வெளிநாட்டு சந்தையில் அமெரிக்க நாணயத்தின் வலிமை ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் இன்று, இந்திய ரூபாய் ரூ.87.13 ஆக தொடங்கி, குறைந்தபட்சமாக ரூ.87.49 ஆக சரிந்த நிலையில், முடிவில் 39 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிவடைந்தது.

நேற்று இந்திய அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.87.07-ஆக முடிந்தது.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ் 312 புள்ளிகள் சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT