வணிகம்

எல்ஐசி நிகர லாபம் 17% அதிகரிப்பு!

DIN

அரசுக்குச் சொந்தமான, இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) டிசம்பா் காலாண்டு நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,056 கோடியாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.9,444 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் ரூ.1,06,891 லட்சம் கோடி பிரீமியம் வருவாயைப் பெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது குறைவு. அப்போது நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் ரூ.1,17,017 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT