கோப்புப் படம் 
வணிகம்

மகாராஷ்டிர வங்கி வருவாய் அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.7,112 கோடியாக உயா்ந்துள்ளது.

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.7,112 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,406 கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 36 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.1,036 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,851 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.7,112 கோடியாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.5,171 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.6,325 கோடியாக உயா்ந்துள்ளது.

ஓராண்டுக்கு முன்னா் 0.22 சதவீதமாக இருந்த வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் இறுதியில் 0.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT