கோப்புப் படம் 
வணிகம்

2025-ல் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி வெளியேற்றம்!

பிப்ரவரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளிநாட்டு நிதி வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

2025-ஆம் ஆண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தையில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து வரி விதிப்பில் செய்த மாற்றங்கள் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நிலையற்றத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருகின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 78,027 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன. பிப்ரவரியில் இரண்டு வாரங்களில் 21,272 கோடி நிதி வெளியேறியுள்ளது. இவை இரண்டையும் சேர்த்து ரூ. 99,299 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளது.

ஜியோஜித் என்ற நிதிச் சேவை நிறுவனத்தின் மூத்த முதலீட்டு வல்லுநர் வி.கே. விஜயகுமார், டாலர் மதிப்பு குறையும்போது வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது தலைகீழாக நடக்கும் என்றும் அதுவரை இந்த நிலை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச அரசியலானது, இந்தியா போன்ற ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி நிகழும் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT