கோப்புப் படம் 
வணிகம்

இந்திய பங்குச் சந்தைக்கு நாளை (பிப். 26) விடுமுறை! ஏன்?

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் தங்கள் பரிவர்த்தனையை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்

DIN

மகா சிவராத்திரியையொட்டி இந்திய பங்குச் சந்தை வணிகம் நாளை (பிப். 26) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி பங்குகளில் முதலீடு அல்லது விற்பனை செய்பவர்கள் தங்கள் பரிவர்த்தனையை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் அதிக அளவிலான ஹிந்து மக்களால் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.

இதனிடையே மகா சிவராத்திரியையொட்டி இந்திய பங்குச் சந்தைக்கு நாளை (பிப். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களைப் போன்று, இந்த விடுமுறை நாளில் எந்தவித பங்குகள் அல்லது பணப் பரிமாற்றமும் செய்யப்படாது.

கடந்த 5 நாள்களாக சரிந்து வந்த பங்குச் சந்தை வணிகம் இன்று சற்று ஆறுதலளிக்கும் வகையில் சற்று ஏறுமுகத்துடன் முடிந்தது.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147.71 புள்ளிகள் உயர்ந்து 74,602.12 ஆகவும், தொடர்ந்து ஆறாவது அமர்வாக தேசிய பங்குச் சந்தை ஆன நிஃப்டி 5.80 புள்ளிகள் சரிந்து 22,547.55 புள்ளிகளில் நிலைபெற்றது.

நுகர்வோர் துறை பங்குகள், ஆட்டோமொபைல், டெலிகாம் பங்குகள் 0.5% உயர்வுடன் காணப்பட்டன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.6,286.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,185.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க | அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT