PTI Graphics
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிவு!

அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கு ஆகியவற்றால் இது முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக குறைத்து.

DIN

மும்பை: அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கினால் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக குறைத்து, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 28 காசுகள் குறைந்து ரூ.87.46 ஆக முடிவடைந்தது.

அமெரிக்காவின் வரி விதிப்பைச் சுற்றியுள்ள தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்டணக் குழப்பம் அமெரிக்க டாலர் குறியீட்டில் மேலும் ஏற்ற இறக்கத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.32ஆக தொடங்கி, வர்த்தக அமர்வின் போது, ​​டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.53 ஆகக் குறைந்தது, வர்த்தக நேர முடிவில் 28 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக நிலைபெற்றது.

நேற்று (வியாழக்கிழமை) அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.87.18 ஆக இருந்தது.

இதையும் படிக்க: பங்குச் சந்தை: துடைத்தெறியப்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.7.46 லட்சம் கோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT