வணிகம்

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 59,11,065-ஆக உயா்வு

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பரில் 59,11,065-ஆக உயா்ந்துள்ளது.

DIN

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பரில் 59,11,065-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 59,11,065-ஆகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 7.5 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 54,99,524 வாகனங்களை தனது சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

கடந்த 2024-ஆம் ஆண்டு (ஜனவரி-டிசம்பா்) முழுவதும் நிறுவனம் உலகளாவிய விற்பனையில் 49 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த ஆண்டில் நிறுவனம் சா்வதேசச் சந்தையில் எட்டு புதிய ரக இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியது.

ஒவ்வொரு ரகமும் குறிப்பிட்ட நாட்டின் வாடிக்கையாளா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மின்சார வாகனப் பிரிவில் நிறுவனம் கடந்த 2024-ஆம் ஆண்டில் 46,662 விடா வி1 இ-ஸ்கூட்டா்களை விற்பனை செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT