ஷாவ்மியின் பவர் பேங்க் படம் / நன்றி -
வணிகம்

ஒரே நேரத்தில் 3 போன்களுக்கு சார்ஜ் செய்யலாம்! ஷாவ்மியின் புதிய பவர் பேங்க்!

ஷாவ்மி நிறுவனம் புதிதாக பவர் பங்க் ஒன்றை ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஷாவ்மி நிறுவனம் புதிதாக பவர் பங்க் ஒன்றை ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதில், ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யலாம்.

இதனால், கூட்டுக் குடும்பமாக அல்லது நண்பர்களுடன் குழுவாகப் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு இந்த பவர் பேங்க் பயனுள்ளதாக இருக்கும் என ஷாவ்மி குறிப்பிடுகிறது.

பவர் பேங்க் பயன்படுத்துவோர் பலரின் பொதுவான கோரிக்கை, அதன் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதே. இதனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய பவர் பேங்கில் 20000mAh திறன் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமின்றி 22.5W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்தாலும், மேலும் சிலமுறை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

  • பவர் பேங்கில் யூஎஸ்பி - சி கேபிள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து வகையான ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், இயட்பட்ஸ் போன்ற பிற சாதனங்களுக்கும் சார்ஜ் செய்துகொள்ளலாம். ஸ்மார்ட்போன்களுக்கான சார்ஜரிலேயே பவர் பேங்கிற்கும் சார்ஜ் செய்துகொள்ளலாம். கூடுதல் வயர்கள் தேவைப்படாது.

  • 20000mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 22.5W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பயன்படுத்துவதற்கு மிகுந்த பாதுகாப்பானது. 12 அடுக்கு பாதுகாப்பு உடையது. இதனால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு குறைவு.

  • ஒரே நேரத்தில் 3 மின்னணு சாதனங்களுக்கு சார்ஜ் செய்யலாம்.

  • இளம் பச்சை மற்றும் கருப்பு ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.

  • இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ. 1,799.

இதையும் படிக்க | தரமான கேமரா, சக்திவாய்ந்த புராசஸர்... ஒன்பிளஸ்ஸின் புதிய ஸ்மார்ட்போன்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT