கோப்புப் படம் 
வணிகம்

டிசிஎஸ் பங்குகள் 2.51% சரிவு!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.51 சதவிகிதம் சரிந்தன.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.51 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தன.

நிறுவனத்தின் ஜூன் முடிய உள்ள காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் பங்குகள் விலை சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பிஎஸ்இ-யில் 2.43 சதவிகிதம் சரிந்து ரூ.3,300 ஆக இருந்தது. அதே வேளையில் என்எஸ்இ-யில் 2.51 சதவிகிதம் குறைந்து ரூ.3,297 ஆக முடிவடைந்தது. இதனையடுத்து இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவன பங்குகளும் விறப்பனை அழுத்தத்தை சந்தித்தது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் 6 சதவிகித லாப உயர்வுடன் சந்தை எதிர்பார்ப்புகளை முறியடித்தன. இருப்பினும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக உற்சாகம் குறைந்தது.

நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நேற்று ஜூன் மாதம் வரையான காலாண்டு நிகர லாபம் 6 சதவிகித வளர்ச்சியடைந்து ரூ.12,760 கோடியாக உள்ளது என்றது.

டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள், ஐடி நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெரிய நிறுவனங்களுக்கு, தொடர்ச்சியான போராட்டத்தை சந்திக்க நேரிடும். இருப்பினும், ஐடி மிட்கேப் குறியீடுகள் சிறப்பாகச் செயல்பட்டது.

இதையும் படிக்க: க்ளென்மார்க் பார்மா பங்குகள் 10% உயர்வுடன் நிறைவு!

TCS dropped 2.51 per cent today after its June quarter earnings failed to enthuse investors.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தனிமையிலொரு இரவில் தற்படம்... சஞ்சி ராய்!

மலரோணப் பாட்டு... பார்வதி நாயர்!

அரேபிய நேசம்... அனுஷ்கா சென்!

மீரட்: பெண்களைக் கடத்தும் நிர்வாண கும்பல்! போலீஸார் விசாரணை

SCROLL FOR NEXT