லூபின் 
வணிகம்

அமெரிக்காவில் ஜெனரிக் கண் மருந்தை அறிமுகப்படுத்திய லூபின்!

கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஜெனரிக் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருந்து நிறுவனமான லூபின் தெரிவித்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஜெனரிக் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருந்து நிறுவனமான லூபின் இன்று தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளர் ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், இந்த நிறுவனம், பாஷ் & லோம்ப் இன்க் நிறுவனத்தின் லோடிமேக்ஸ் ஆப்தால்மிக் சஸ்பென்ஷனுக்கு சமமான லோட்டிரெட்னோல் எட்டபோனேட் ஆப்தால்மிக் சஸ்பென்ஷனை அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

லோட்டிரெட்னோல் எட்டாபோனேட் ஆப்தால்மிக் சஸ்பென்ஷன், 0.5 சதவிகிதம், கண்ணில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்து. குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் என்றது லூபின்.

பிஎஸ்இ-யில் லூபின் பங்குகள் 1.04 சதவிகிதம் குறைந்து ரூ.1,931.10 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 18 காசுகள் சரிந்து ரூ.85.94 ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT