வணிகம்

பரோடா வங்கி நிகர லாபம் 2% அதிகரிப்பு

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.4,541 கோடியாக உள்ளது.முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 1.9 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.4,458 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.11,435 கோடியாக உள்ளது.ஓராண்டுக்கு முன்னா் 2.26 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த ஜூன் இறுதியில் 2.28 சதவீதமாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

எதிர்நீச்சல் போடுபவர்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT