இண்டிகோ - கோப்புப் படம் 
வணிகம்

சர்வதேச விரிவாக்கத்திற்காக 30 ஏ-350 விமானங்களை கொள்முதல் செய்யும் இண்டிகோ!

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 30 ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, 30 ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை நாட்டின் நீண்ட கால சர்வதேச விரிவாக்கத்திற்கான முயற்சிகளை அதிகரிக்கும் வகையில் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், விமான நிறுவனம் 30 ஏர்பஸ் ஏ350 விமானங்களுக்கு உறுதியான ஆர்டரை வழங்கியது.

தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், 70 விமானங்களுக்கான ஆர்டர் இருக்கும் நிலையில், இப்போது 30 விமானங்களுக்கு உறுதியான ஆர்டரை வழங்குவதாக தெரிவித்தார். அதே வேளையில், விமான நிறுவனம் வரும் ஆண்டுகளில் 900 க்கும் மேற்பட்ட விமானங்களை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது என்றது.

2030 ஆம் ஆண்டுக்குள் 600 க்கும் மேற்பட்ட விமானங்களை வைத்திருக்க வேண்டும், அதே வேளையில் உலகளாவிய விமான நிறுவனமாக மாற வேண்டும் என்ற லட்சியத்துடன், இண்டிகோ, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க ஆகிய இடங்களுக்கு மேம்பட்ட இணைப்பை வழங்க உறுதி பூண்டுள்ளது.

உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டின், இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் ஆர்டரை 30ல் இருந்து 60 ஆக உயர்த்தியது.

இண்டிகோ மார்ச் 2026ல் முடிவடையும் நிதியாண்டில் குத்தகைக்கு எடுக்கும் போயிங் 787 விமானங்களை, 10 புதிய நகரங்களுக்கு இயக்க இண்டிகோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது ​​430 க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ள நிலையில் சுமார் 2,300 தினசரி விமானங்களை இயக்கியும் வருகிறது.

இதையும் படிக்க: டிஷ் டிவியின் 4-வது காலாண்டு இழப்பு ரூ.402.19 கோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வாக்களிக்காத 13 பேர் யார்?

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

நம்பி ஏமாறுபவர்கள் இந்த ராசிக்காரர்கள்!

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!

பூங்காற்று... கீர்த்தி சுரேஷ்!

SCROLL FOR NEXT