தங்கம் விலை குறைந்தது DPS
வணிகம்

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலை அதிரடி குறைவு!!

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1200 குறைந்துள்ளது.

DIN

சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோல, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,200 குறைந்து ரூ.71,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.73,040க்கு விற்பனையானது.

எப்போது உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று ரூ.1,200 அளவுக்கு விலை குறைந்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜூன் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று விலை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் அதாவது ஜூன் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,360 ஆக இருந்த நிலையில் ஆறு நாள்களில் படிப்படியாக ரூ.1680 வரை உயர்ந்து, ரூ.73,040க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு வாரத்தில் உயர்ந்த தொகையில் ரூ.1200 இன்று குறைந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.117 -க்கு விற்பனையகிறது. அதன்படி, கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,17,000-க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

இருசக்கர வாகனம் எரிப்பு: இருவா் கைது

சீன ஓபன்: இறுதிச் சுற்றில் அனிஸிமோவா-லிண்டா

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: ஜெகதிஸ்ரீ முதலிடம்

மக்களுக்கு நல்லது செய்வதை தடுப்பதே திமுகவின் நோக்கம்: பாஜக மாநில பொதுச் செயலா்

SCROLL FOR NEXT