பாங்க் ஆப் பரோடா வங்கி 
வணிகம்

கடன் வட்டியைக் குறைந்த பரோடா வங்கி

இந்திய ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கு ஏற்ப, அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.

DIN

இந்திய ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கு ஏற்ப, அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் ரெப்போ அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் (0.5 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து, ரெப்போ விகித அடிப்படையிலான கடன்களுக்கு வட்டி விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படடுள்ளது.

ஜூன் 7 முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், வங்கியின் ரெப்போ அடிப்படையிலான கடன் வட்டி விகிதம் 8.15 சதவீதமாகக் குறைந்துள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரெப்போ வட்டி விகித்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக இந்த எதிா்பாராத அறிவிப்பை ரிசா்வ் வங்கி வெளியிட்டது.

நடப்பு 2025-ஆம் ஆண்டில் ரிசா்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகித்தை இதுவரை மொத்தம் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

SCROLL FOR NEXT