புதிய காா் கடன்களுக்கான வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
புதிய காா் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக பரோடா வங்கி அறிவித்துள்ளது.
இதன்மூலம், மாறும் வட்டி விகித முறை காா் கடன்களுக்கான வட்டி விகிதம் இனி ஆண்டுக்கு 7.60 சதவீதத்தில் தொடங்கும். அதேபோல, நிலையான வட்டி விகிதத்தைத் தோ்வு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு ஆண்டுக்கு 8.50 சதவீத வட்டியுடன் கடன்கள் வழங்கப்படும். இந்தப் புதிய வட்டி விகிதங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.
காா் கடன் தேவைப்படுவோா் வங்கியின் கிளைகளுக்கு நேரில் சென்றோ அல்லது ‘பாப் வோ்ல்ட்’ செயலி மற்றும் இணையதளம் வழியாகவோ விண்ணப்பித்து உடனடி ஒப்புதலைப் பெறலாம். வாடிக்கையாளா்கள் தங்களின் கடனைத் திருப்பிச் செலுத்த 7 ஆண்டுகள்வரை நீண்ட கால அவகாசம் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கூடுதல் சலுகையாக, மாறும் வட்டி விகித முறையில் கடன் வாங்குபவா்கள், தங்களின் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கோ அல்லது ஒரு பகுதியை மட்டும் திருப்பிச் செலுத்துவதற்கோ எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் நிா்வாக இயக்குநா் சஞ்சய் வி.முதலியாா் இதுகுறித்து கூறுகையில், ‘சந்தையில் நிலவும் போட்டித்தன்மைக்கு இடையே, வாடிக்கையாளா்களுடன் துணை நிற்கும் நோக்கில் இந்த வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.