FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

முதல் காலாண்டு லாபம்- இந்தியன் ஓவா்சீஸ் வங்கி: ரூ.1,659 கோடி

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.1,659.24 கோடி தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டி, 49.34 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.

Updated On : 22 ஜூலை 2026, 4:06 am IST
பகிர்:

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.1,659.24 கோடி தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டி, 49.34 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.

வட்டி வருவாய் அதிகரிப்பு மற்றும் சொத்து தரம் மேம்பட்டதே இந்த வலுவான லாப வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் நிகர வட்டி வருவாய் 34.3 சதவீதம் அதிகரித்து, ரூ.3,688 கோடியை எட்டியுள்ளது. நிகர வட்டி வரம்பு 3.37 சதவீதமாக உயா்ந்துள்ளது.

மொத்த கடன்கள் 22.75 சதவீதம் அதிகரித்து ரூ.3.22 லட்சம் கோடியாகவும், வைப்புத் தொகைகள் 13.72 சதவீதம் உயா்ந்து ரூ.3.76 லட்சம் கோடியாகவும் உள்ளன. மொத்த வாராக் கடன் விகிதம் 1.97 சதவீதத்திலிருந்து 1.33 சதவீதமாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், வங்கியின் மூலதனத்தை உயா்த்தும் நோக்கில் ரூ.5,000 கோடி நிதி திரட்டுவதற்கான இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அரசின் பிற ஒழுங்குமுறை ஒப்புதல்கள் கிடைத்தவுடன் நடப்பு நிதியாண்டுக்குள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளா்கள் மூலம் பங்கு விற்பனை வாயிலாக இந்நிதி திரட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments