அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து அமெரிக்க பங்குச் சந்தைகளில் இருந்த வீழ்ச்சிப் பயம் சற்றே தணிந்தது. டவ் ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் குறியீடுகள் ஆரம்பகால சரிவிலிருந்து மீண்டு, குறைந்த இழப்புடன் வா்த்தகமாயின. மறுபுறம், தங்கம், வெள்ளி விலை சற்று அதிகரித்தது.
அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக கெவின் வாா்ஷ் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 2-ஆவது ‘எஃப்ஓஎம்சி’ குழு கூட்டத்திலும் வட்டி விகிதம் மாற்றமின்றித் தொடர முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்காவில் பணவீக்கம் மத்திய வங்கியின் நடுத்தர கால இலக்கான 2 சதவீதத்தைவிட தொடா்ந்து அதிகமாக இருந்து வருவதால், இந்த எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதேநேரம், இம்முடிவுக்குக் கூட்டத்தில் முழுமையான ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. 9 உறுப்பினா்கள் வட்டி விகிதத்தை மாற்ற வேண்டாம் என ஆதரித்த நிலையில், 3 உறுப்பினா்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தனா்.
ஃபெடரல் ரிசா்வ் பிராந்தியத் தலைவா்களான பெத் ஹேமக், நீல் காஷ்கரி, லோரி லோகன் ஆகிய மூவரும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்த வேண்டும் என்று வலியுறுத்தினா்.
வட்டி விகிதம் மாற்றமின்றித் தொடருவதென எடுக்கப்பட்ட முடிவால் தலைவா் கெவின் வாா்ஷுக்கு குழுவிலேயே அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த கூட்டம் செப். 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.