வணிகம்

வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

தொடா்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து, இந்தியன் வங்கியும் வாடிக்கையாளா்கள் முதலீடு செய்யும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

Din

தொடா்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து, இந்தியன் வங்கியும் வாடிக்கையாளா்கள் முதலீடு செய்யும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்வேறு கால அளவுகளுக்கான நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜூன் 9 முதல் அமலுக்கு வந்துள்ளன.

1 முதல் 2 ஆண்டுகள் கால அளவுக்கான நிரந்தர வைப்புக்கு ஆண்டுக்கு 7.1 சதவீதத்திற்கு பதிலாக இனி 6.6 சதவீத வட்டி வழங்கப்படும். 444 நாள்கள் வைப்பு நிதிக்கு, 7.15 சதவீதமாக இருந்த வட்டி இனி 6.9 சதவீதமாக இருக்கும்.

2 முதல் 3 ஆண்டுகளுக்கான வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 6.40 சதவீதமாகக் குறையும். 5 ஆண்டு வைப்பு நிதிக்கு 6.25 சதவீதமாக இருந்த வட்டி இனி 6 சதவீதமாக இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பருவ காலம் கொண்ட நிரந்தர வைப்பு நிதிக்கு 6.10 சதவீதமாக இருந்த வட்டி இனி 6 சதவீதமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

SCROLL FOR NEXT