Ahmedabad plane crash: Boeing 787-8 Dreamliner 
வணிகம்

ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து போயிங் பங்குகள் 8% சரிவு!

242 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை அடுத்து, விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குகள் 8% சரிந்து வர்த்தகமாயின.

DIN

ஆமதாபாத்திலிருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் (ஜூன் 12) அமெரிக்க சந்தையில் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குகள் 8% சரிந்து வர்த்தகமாயின.

விமான கண்காணிப்பு தளமான ஃப்ளைட்ராடார்-24, விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்றும், இது சேவையில் உள்ள மிகவும் அதிநவீன பயணிகள் விமானங்களில் ஒன்றாகும் என்றது.

ஆமதாபாத்திலிருந்து விமானம் லண்டனுக்குப் புறப்பட்டு சென்று கொண்டிருந்த வேளையில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து நொறுங்கிதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போயிங் தனது அறிக்கையில் அறிவித்திருப்பதாகவும் மேலும் இது குறித்து தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தது.

சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில், போயிங்கின் பங்குகள் சுமார் 8 சதவிகிதம் சரிந்து பங்குகள் $196.52 ஆக வர்த்தகமானது.

இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி 1% சரிந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT