கடன் வட்டியைக் குறைத்த மகாராஷ்டிர வங்கி
ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்புக்கு ஏற்ப, அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிர வங்கி தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்புக்கு ஏற்ப, அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிர வங்கி தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரெப்போ அடிபபடையிலான கடன்களுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது.இது சில்லறை (வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபா் கடன் போன்றவை) கடன்தாரா்களுக்கு பயனளிக்கும்.
Advertisement
புதிய கடன் விகிதங்கள் ஜூன் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.