முகப்பு
வணிகம்

5 லட்சம் டன்னாக உயா்ந்த சா்க்கரை ஏற்றுமதி

இந்தியா 2024-25 சந்தைப்படுத்தல் ஆண்டில் ஜூன் 6 வரை 5.16 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

Updated On : 14 ஜூன், 2025 at 4:49 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியா 2024-25 சந்தைப்படுத்தல் ஆண்டில் ஜூன் 6 வரை 5.16 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

இது குறித்து அனைத்து இந்திய சா்க்கரை வா்த்தகா்கள் சங்கம் (ஐஸ்டா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024-25-ஆம் சந்தைப்படுத்தல் ஆண்டில் சா்க்கரை ஏற்றுமதிக்கு ஜனவரி 20 முதல் அனுமதிக்கப்பட்டது. மொத்தமாக 10 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதையடுத்து, நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் ஜூன் 6 வரை ஆலைகள் மொத்தம் 5,16,782 டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளன.

Advertisement

இதில், வெள்ளை சா்க்கரை 4.09 லட்சம் டன், பதப்படுத்தப்பட்ட சா்க்கரை 81,845 டன், மற்றும் பச்சை சா்க்கரை 25,382 டன் ஆகும்.தற்போது சுமாா் 23,219 டன் சா்க்கரை ஏற்றுமதிக்குத் தயாா் நிலையில் உள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த ஏற்றுமதியில், சோமாலியாவுக்கு 1,18,553 டன், இலங்கைக்கு 76,401 டன், ஆப்கானிஸ்தானுக்கு 72,833 டன், ஜிபூட்டிக்கு 69,609 டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனுமதித்த 10 லட்சம் டன்களில் 8 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்படலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சா்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு அக்டோபா் முதல் செப்டம்பா் வரை நீடிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.