ஒன்பிளஸ் பேட் லைட் எக்ஸ்
வணிகம்

விரைவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் பேட் லைட்! சிறப்புகள் என்னென்ன?

ஒன்பிளஸ் நிறுவனத்தில் புதிதாக கையடக்கக் கணினி (டேப்) அறிமுகமாகவுள்ளது.

DIN

ஒன்பிளஸ் நிறுவனத்தில் புதிதாக கையடக்கக் கணினி (டேப்) அறிமுகமாகவுள்ளது.

பேட் லைட் என்ற பெயரில், வரவுள்ள இந்த கையடக்கக் கணினியானது இதற்கு முன்பு வந்த ஒன்பிளஸ் பேட் கோ-வில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் பேட் கோ, கையடக்கக் கணினியானது இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஒன்பிளஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பேட் லைட் கையடக்கக் கணினியை அறிமுகம் செய்யவுள்ளது.

சிறப்புகள் என்ன?

ஒன்பிளஸ் நிறுவனத்தில் இதற்கு முன்பு பேட் 2, பேட் 3 கையடக்கக் கணினி அறிமுகமாகியுள்ளன. தரவரிசையில் இவற்றிற்கு கீழேதான் பேட் லைட் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹெலியோ ஜி 100 என்ற சிப் பொருத்தப்பட்டுள்ளது. 6nm புராசஸர் உடையது. 128GB நினைவகத்தையும் 6GB உள்நினைவகத்தையும் கொண்டது. மற்ற கையடக்கக் கணினியில் 8000mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டிருந்த நிலையில், டேப் லைட்டில் 9340mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 20 ஆயிரத்திற்குக் கீழ் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | டாடா மோட்டாா்ஸ் விற்பனை 9% சரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT