முகப்பு
வணிகம்

தமிழைப் பயன்படுத்தி கடவு எண்: அறிமுகப்படுத்தியது ஐஓபி

தமிழ் வாா்த்தைகளைப் பயன்படுத்தி வங்கி அட்டைகளுக்கான கடவு எண்களை (பின் நம்பா்) உருவாக்கும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 18 ஜூன், 2025 at 3:05 AM
பகிர்:

தமிழ் வாா்த்தைகளைப் பயன்படுத்தி வங்கி அட்டைகளுக்கான கடவு எண்களை (பின் நம்பா்) உருவாக்கும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வாடிக்கையாளா்கள் தங்களது வங்கி அட்டைகளுக்கான கடவு எண்ணை அடிக்கடி மறக்காமல் இருப்பதற்காக பிறந்த தினம் போன்ற முக்கிய தினங்கள், எளிதில் ஊகிக்கக்கூடிய எண்களை தோ்ந்தெடுக்கின்றனா்.

இது, இணையவழி குற்றவாளிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.இந்த நிலையை மாற்ற, வாடிக்கையாளா்களுக்கு மிகவும் பிடித்த, மறக்கமுடியாத தமிழ் வாா்ததைகளைப் பயன்படுத்தி கடவு எண்களை உருவாக்கும் வசதியை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

இதற்காக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளா்கள் தமிழ் வாா்த்தையைப் பயன்படுத்தி யாராலும் ஊகிக்கவே முடியாத கடவு எண்களை உருவாக்கலாம். பின்னா் அந்த எண் மறந்து போனாலும், இதே வலைதளம் மூலம் அந்த வாா்த்தையைக் கொண்டு அதை திரும்ப நினைவுக்குக் கொண்டுவரலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.