தமிழில் உயர்கல்வி: சிக்கலும் தீர்வும்? தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்
தமிழில் உயர்கல்வி என்பதை உருவாக்குதில் என்ன சிக்கல் என்ன தீர்வு என கணக்கிட்டதில் தொழில்நுட்ப மேம்பாடு அவசியம் என்பது பற்றி..
நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் பல கல்விகளை அளித்து, திறமையுள்ள மாணவர்களை உருவாக்கி வந்தாலும், வேலை வாய்ப்பு என்று பின்தங்குவது ஏன் என்பதே சவாலாக மாறியிருக்கிறது.
அதிக கட்டணம் கட்டி தொழிற்கல்வி படித்தாலும்கூட வளாகத் தேர்வின்போது, போதிய திறன் இல்லாததால், வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதில் மாணவர்கள் பலரும் பின்தங்கி விடுகிறார்கள்.
மாணவர்களின் திறனை வளர்க்க, தொழில்படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற கருத்து அதிகரித்து வருகிறது. மறுபக்கம், மொழி ஒரு தடையாக இருக்கவே கூடாது, ஆங்கிலத்தில் கற்பித்தால்தான் வளாக நேர்காணல்களின்போது பிரகாசிக்க முடியும் என்ற கூற்றும் எழுகிறது.
Advertisement
Advertisement
அறிவுலகின் பெரு வெடிப்பு மொழி. இயந்திரம் மக்களுடன் உரையாடும் காலம் இது. இயந்திரத்திற்கு மொழி கற்றுத் தர வேண்டிய காலம் இது. இயந்திரத்திலிருந்து பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் காலம் இது. மனிதர்களா? இயந்திரமா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உரையாடல் வளரும் காலம் இது.
பேசாமலே ஒருவர் கருத்தை மற்றவர்க்கு உணர்த்தும் நீரோ லிங்க் தொழில் நுட்பத்தைக் கொண்டுவர எலான் மஸ்க் முயற்சி செய்கிறார். நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில், எழுத்துகள் இல்லாமல், சொல் இல்லாமல், பேச்சு இல்லாமல், ஒருவருடைய எண்ணங்கள், மற்றவருக்குத் தொழில்நுட்பம் மூலமாக மாற்றப்படும் போதும் , மொழி தேவைப்படுகிறது. எல்லைகள் அற்ற உலகமாக இணைய உலகம் இருக்கிறது. அங்கே நிலமும் இல்லை; பொழுதும் இல்லை.
நிலமற்ற உலகமாக, காலம் அற்ற இடமாக இணைய உலகம் வளர்ந்து வருகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் மெய்நிகர் உலக இயக்கத்திற்கும் மொழி தேவை.
இப்படியாக இந்த அளவில் நாம் வளர்ந்து இருப்பதற்குக் காரணம் அறிவு. அறிவை வளர்ப்பதில் பெரும் பங்கு மொழிக்கு உரியது. அறிவை வளர்க்கும் மொழி அப்படியே தன்னையும் வளர்த்துக்கொண்டு வரும்; வர வேண்டும். இல்லையேல் வரலாற்று ஓட்டத்தில் அந்த மொழி தேங்கிப் போய்த் தங்கிவிடும். அதனால் அந்த மொழியில் சேமிக்கப்பட்டிருக்கும் கருவூலங்கள் தொடர்ச்சி இல்லாமல் புதையலாகப் போய்விடும் நிலை ஏற்படும்.
சம காலக் கல்வியோடு... யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்றார் பாரதியார். தமிழ் மொழி காலம் தோறும் இனிதாக ஆகிக் கொண்டிருக்கிறது என்றால் - ஆக வேண்டும் என்றால் சமகாலக் கல்வியோடு இணைய வேண்டும். குறிப்பாக உயர்கல்வியோடு இணைய வேண்டும்.
உயர் கல்வியில் தமிழ், பயிற்று மொழியாக வேண்டும். தமிழ் மொழியின் செல்வாக்கு உயர் கல்வியிலும் இடம்பிடிக்க வேண்டும். இது காலத்தின் கோரிக்கையாகும். அறிவியல், தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தமிழ் வழிக் கல்வி செல்வாக்கு பெற வேண்டும். இதுவே கல்வியில் மொழிக்கு சமநீதி கிடைக்கவும் சமத்துவத்தை நிலைநிறுத்தவும் அடித்தளத்தை உருவாக்கும்.
உளவியல் சிக்கல்...உயர்கல்வியில் தமிழ் மொழிக்கு எதிர்நிலையும் எதிர்வினையும் தொடர்ந்து உருமாறிக் கொண்டிருக்கின்றன. தமிழின் பெருமை, பண்பாட்டுத் தழைப்பு, மற்றும் இலக்கியப் பங்களிப்புப் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தாலும் உயர்கல்வியில் அதற்கான இடத்தை இன்னும் தமிழ் முழுமையாக அடையவில்லை என்பதே உண்மை நிலையாக இருக்கிறது.
About the need for technological development in calculating what the problem is and what the solution is in creating higher education in Tamil.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.