விவோ டி 4 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய மின்னணு சந்தையில் இன்று (ஜூன் 18) அறிமுகமாகியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்துடன் அதிக திறன் கொண்ட ஆண்டிராய்டு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் டி 4 அல்ட்ராவை வாங்கலாம் என விவோ உத்திரவாதம் அளித்துள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
அந்தவகையில் இன்று (ஜூன் 18) நண்பகல் 12 மணிமுதல் விவோ டி 4 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
256GB நினைவகம், 8GB உள் நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 37,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
256GB நினைவகம் 12GB உள் நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 39,999 என்றும், 512GB நினைவகம் 12GB உள்நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 41,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவோ டி 4 சிறப்பம்சங்கள்
விவோ டி 4 ஸ்மார்ட்போனில் 6.67 அங்குல அமோலிட் திரை வழங்கப்பட்டுள்ளது.
தொடுதிரையைப் பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறனும், பிரகாசமாய் இருப்பதற்கு 5,000 nits திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிராய்டு 15 ஃபன்டச் புராசஸருடன் செய்யறிவு தொழில்நுட்பக் கருவிகளும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.
பின் பக்கம் மூன்று கேமராக்கள். இதில் 50 MP ஐ.எம்.எக்ஸ். 921 என்ற சோனி சென்சார், 50 MP ஐ.எம்.எக்ஸ். 882 சென்சார் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் மூன்று மடங்கு அதிகமாக ஜூம் செய்தாலும் படங்களின் துல்லியத்தன்மை சிதையாது.
முன்பக்கத்தில் செல்ஃபி பிரியர்களுக்காக 32MP அல்ட்ரா எச்.டி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.
5,500mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 90W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க நிறத்திலும் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.