ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 62,940 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 24,913 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலையடுத்து கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க தாக்குதல், நீரிணையை மூடும் ஈரானின் முடிவு போன்றவை பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.