முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக முடிவு!

வலுவான அந்நிய வரவுகள் மற்றும் உறுதியான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் பின்னணியில் டாலருக்கு நிகரான ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக நிறைவடைந்தது.

Updated On : 27 ஜூன், 2025 at 7:03 PM
- PTI Graphics
பகிர்:
Updated On : 27 ஜூன், 2025 at 6:58 PM

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் உறுதியான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் பின்னணியில் வெள்ளிக்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக நிறைவடைந்தது.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்றம் இந்திய ரூபாயின் லாபத்தை குறைத்த போதிலும், அமெரிக்க டாலரின் குறியீடு சரிந்த நிலையில், இந்திய ரூபாய்க்கு இது சாதகமாக அமைந்தது என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜூன், 2025 at 6:58 PM

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.50 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.43 முதல் ரூ.85.65 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48ஆக நிறைவடைந்தது.

Advertisement

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ.85.72 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: தொடர்ந்து 4வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.