தங்கம் விலை (கோப்புப்படம்) din
வணிகம்

தங்கம் விலை மீண்டும் ரூ.66,000!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 இன்று அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் முதல் முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 65,000-ஐ கடந்த நிலையில், வார இறுதி நாளான சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 65,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று(திங்கள்கிழமை) ஒரு சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 65,680-க்கு வர்த்தகமானது.

செவ்வாய்க்கிழமை இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ. 8,250-க்கு விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக ரூ. 66,000-ஐ தொட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல், வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 113-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹேப்பி தந்தேராஸ்... நேஹா சர்மா!

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா? சரிசெய்யும் 10 இயற்கை வழிமுறைகள்!

பைசன், டியூட், டீசல் முதல்நாள் வசூல்... தீபாவளி வெற்றியாளர் யார்?

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் தண்ணீர் திறப்பு!

தீபாவளி ஸ்பெஷல்... மிருணாள் தாக்குர்!

SCROLL FOR NEXT