கோப்புப் படம் 
வணிகம்

தி மிஸ்ஸிங் லிங் நிறுவனத்தை கையகப்படுத்திய இன்போசிஸ்!

ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனமான, தி மிஸ்ஸிங் லிங்-கை சுமார் ரூ.532 கோடி ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் இன்று தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனமான, 'தி மிஸ்ஸிங் லிங்'-கை சுமார் ரூ.532 கோடி ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் இன்று தெரிவித்துள்ளது.

அதன் துணை நிறுவனமான இன்போசிஸ் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் மூலம் இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது இன்போசிஸ்.

இந்த கையகப்படுத்தல் மூலம் இன்போசிஸின் சைபர் பாதுகாப்பு திறன் மேலும் வலுப்படும். அதே நேரத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஆஸ்திரேலிய சந்தையில் அதன் இருப்பை அதிகரிக்க செய்யும். இதன் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்கள் அவர்களின் டிஜிட்டல் பயணத்தை வழிநடத்துவதற்கான உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

1997ல் நிறுவப்பட்ட தி மிஸ்ஸிங் லிங்க், சைபர் செக்யூரிட்டி மற்றும் கிளவுட் சேவைகள் வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் சைக்கிள் பயணம் தொடக்கம்

நீதிமன்றத்தில் தஞ்சாவூா் எம்.எல்.ஏ. ஆஜா்

‘எஸ்.ஐ.ஆா் வாயிலாக பாஜக தோ்தலில் ஜெயித்துவிடலாம் என நினைத்தால் நடக்காது’

SCROLL FOR NEXT