இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 
வணிகம்

எரிபொருள் கையிருப்பில் உள்ளது; அச்சம் வேண்டாம்: இந்தியன் ஆயில்

எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.

DIN

போதுமான அளவுக்கு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மக்கள் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மக்கள் அனைவரும் அமைதிகாக்குமாறும், தேவையில்லாமல் பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்று வாகனங்களில் எரிபொருள் நிரப்ப எந்த அவசரமும் காட்ட வேண்டாம் என்றும், இதனால், எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறும். நாட்டில் எரிபொருள் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளதால், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.

இந்தியன் ஆயில் நிறுவனமானது வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், எரிபொருள் சேவை வழக்கமான முறையில் சீராக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், அதன் செயல்பாட்டு வழித்தடங்கள் சீராக இயங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியன் ஆயில் தன்னுடைய எக்ஸ் பதிவில், "இந்தியன் ஆயில் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்புகளைக் கொண்டுள்ளது, மேலும் எங்கள் விநியோக வழித்தடங்கள் சீராக இயங்குகின்றன. மக்கள் அச்சம் அடைந்து எரிபொருள் வாங்க வேண்டிய அவசியமில்லை - எரிபொருள் மற்றும் எல்பிஜி என எங்கள் அனைத்து விற்பனை நிலையங்களிலும் உடனடியாகக் கிடைக்கின்றன." மக்கள் அமைதியாக இருக்கவும் தேவையற்ற அவசரத்தைத் தவிர்க்கவும் அது மேலும் அறிவுறுத்தியது, இது நிறுவனத்தின் விநியோக வழித்தடங்களை தடையின்றி இயங்கவும் அனைவருக்கும் தடையற்ற எரிபொருள் வழங்கலை உறுதி செய்யவும் உதவும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இரண்டு அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்ததால், பெட்ரோல் பம்புகளுக்கு வெளியே மக்கள் வரிசையில் நிற்பதைக் காட்டும் பதிவுகள் மற்றும் விடியோக்களால் சமூக ஊடகங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்தே இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் இந்த அறிக்கை வந்துள்ளது.

புதன்கிழமை, பஞ்சாபின் சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் அதிகளவில் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பும் நிலை காணப்பட்டது, எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்க விரைந்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

நாகா்கோவிலில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளைய மின்தடை: மேமாத்தூா், பரசலூா்

தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

SCROLL FOR NEXT