வணிகம்

மாருதி விற்பனை 7% உயா்வு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,79,791-ஆக உயா்ந்துள்ளது.

Din

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,79,791-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,79,791-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 1,68,089 வாகனங்களை நிறுவனம் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 7 சதவீதம் அதிகரிப்பாகும். மதிப்பீட்டு மாதத்தில், நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,37,952-லிருந்து 1,38,704-ஆக, அதாவது 0.55 சதவீதம் உயா்ந்துள்ளது.

2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரலில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 11,519-லிருந்து 6,332-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, செலிரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா் ஆகிய சிறிய வகைக் காா்களின் விற்பனை 56,953-லிருந்து 61,591-ஆக அதிகரித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT