விவோ வி50 எலைட்  
வணிகம்

விவோ வி50 எலைட் இன்று அறிமுகம்! விற்பனையில் முற்றிலும் புதுமை!

விவோ வி50 எலைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (மே 15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DIN

விவோ வி50 எலைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (மே 15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஸ்மார்ட்போனுடன் புளூடூத் ஹெட்செட் வழங்கப்படுகிறது.

தனித்துவமான வடிவம் மற்றும் நிறத்துடன் மட்டுமல்லாமல், அதிக பேட்டரி திறன், மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்கள் உள்ளிட்டவை பயனர்களை ஈர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் இந்திய சந்தையில் நம்பகத்தன்மை வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. ஷாவ்மி நிறுவனத்துக்குப் போட்டியாக அதன் தயாரிப்புகளின் மேம்பாடுகளைப் போன்றே தனது தயாரிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

விவோ வி50 எலைட் சிறப்புகள் என்னென்ன?

விவோ வி50 எலைட் ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக, இந்த ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்தால், ப்ளூடூத் ஹெட்செட் உடன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. மற்ற நிறுவன தயாரிப்புகளில் இருந்து வேறுபடுத்திக் காண்பிக்கும் வகையில் இந்த முயற்சியை விவோ மேற்கொண்டுள்ளது.

  • ரோஜா சிவப்பு நிறத்தில் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • 512GB நினைவகமும் 12GB உள்நினைவகமும் வழங்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் இதன் விலை ரூ. 40,999.

  • அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட அனைத்து இணையதள விற்பனை தளங்களிலும், சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்.

விவோ வி50 எலைட் சிறப்பம்சங்கள்

விவோ வி50 எலைட் ஸ்மார்ட்போனானது 6.77 அங்குல திரை கொண்டது. திரையை சுமூகமாகக் கையாளும் வகையில் 120Hz திறன் கொண்டது.

குவால்காம் ஸ்நாப்டிராகன் 7 மூன்றாம் தலைமுறை புராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

பின்பக்க முதன்மை கேமராவுக்கு 50MP லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று முன்பக்க செல்ஃபி கேமராவுக்கும் 50MP வழங்கப்பட்டுள்ளது.

6000mAh பேட்டரி திறனுடன் 90W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் வழக்கில் திடீர் திருப்பம்! தங்களுக்கே தெரியாமல் மனு... பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT