ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!
ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான கே14எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது குறித்து..
ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான, கே14எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
இணையதள விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் மட்டும் முதல்கட்ட விற்பனை தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி ஓப்போ நிறுவனத்தின் கிளைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருவகை நினைவக அம்சங்களில் அறிமுகமாகியுள்ளன.
4GB உள்நினைவகம் ( RAM) 128GB நினைவகம் (RAM) உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 14,999.
Advertisement
Advertisement
6GB உள்நினைவகம் 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 16,999.
இணையதளத்தில் வாங்கும்போது சில கடன் அட்டைகளுக்கு ரூ. 1,500 வரை சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. வட்டி இல்லா தவணை முறைகளும் உண்டு.
ஓப்போ கே14எக்ஸ் 5ஜி சிறப்பம்சங்கள்
6.75 அங்குல எல்.இ.டி. திரை உடையது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
திரை பிரகாசமாக இருக்க 1,125 திறன் வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் 50MP முதன்மை கேமராவும் 2MP இரண்டாவது சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 5MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
செய்யறிவு தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களின் புன்புலங்களை எடிட் செய்ய முடியும்.
6,500mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
மழை நீர், தூசி புகாதவண்ணம் IP64 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
OPPO K14x 5G first sale goes live in India
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.