டாடா நிறுவனத்தின் பிரபலமான எஸ்யுவி கார்களில் ஒன்றான டாடா சியரா மீண்டும் இந்தியாவில் நவம்பர் 25ல் அறிமுகம் செய்ய உள்ளது.
1991ல் அறிமுகம் செய்யப்பட்டது டாடா சியரா, 2003ல் இதன் உற்பத்தியை நிறுத்தியது. இந்த நிலையில் இந்த கார் இந்தியச் சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பிரண்டின் வரிசையில் டாடாவின் புதிய எஸ்யூவி வாங்குபவர்களுக்கு நவீன அம்சங்களுடன் பல பவர்டிரெய்ன் விருப்பங்களை இது வழங்க உள்ளது.
கடந்தாண்டு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. டாடா சியரா தற்போது பல்வேறு மாற்றங்களுடன், புதுவித டெக்னாலஜியுடன் அறிமுகமாகிறது.
சியராவில் பி-பில்லர்ஸ்ரூப், பின்புற ஜன்னல்களுக்கான ராப்-ஓவர் வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.3 டிஜிட்டல் டிஸ்ப்பேக்கள் மற்றும் பின்புற சன் பிளைண்டுகள், ஐசிஇ மற்றும் மின்சார பவர்ரெய்ன் விருப்பங்களுடன் கிடைக்கும்.
புதிய சியராவில் ரூப் ரைல்ஸ், முழு அகல எல்இடி பார்கள், முன்-பின் மற்றும் 2 டன் 19 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. முன் மற்றும் பின்புற வெள்ளி போன்ற ஸ்கஃப் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு பக்கமும் சியரா பிராண்டிங் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான இந்த புதிய கார் 2.0 லிட்டர் டீசல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் என்ஜின் ஆகிய தேர்வுகளில் கிடைக்கும்.
இது ஹரியர் இவியில் உள்ளதுபோன்றே திறன் கொண்ட எலெக்ட்ரிக் வேரியண்டும் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய சியராவின் ஹோரூம் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவி விலை ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.