வணிகம்

ரீநியூ நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.467 கோடி!

செப்டம்பர் வரையான காலாண்டில் ரீநியூ நிறுவனத்தின் நிகர லாபம் 5% சரிந்து ரூ.467.5 கோடியாக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: செப்டம்பர் வரையான காலாண்டில், ரீநியூ நிறுவனத்தின் நிகர லாபம் 5% சரிந்து ரூ.467.5 கோடியாக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிதியாண்டு 2025ல் அதன் 2-வது காலாண்டில் நிறுவனமானது ரூ.493.9 கோடி நிகர லாபத்தை ஈட்டியதாக தெரிவித்தது. அதே வேளையில் 2026ஆம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் நிறவனத்தின் நிகர லாபம் ரூ.493.9 கோடியாக இருந்ததாக ரீநியூ தெரிவித்துள்ளது.

நிதியாண்டின் 2-வது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.467.5 கோடியாக இருந்தது. அதே வேளையில் கடந்த ஆண்டு இது ரூ.493.9 கோடியாக இருந்தது. நிதியாண்டின் 2-வது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.3,855.7 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.2,988.7 கோடியாக இருந்தது.

நிதியாண்டின் 2-வது காலாண்டில் சூரிய தகடு மற்றும் செல் உற்பத்தி நடவடிக்கைகளின் அதன் மொத்த வருவாய் ரூ.10,12.8 கோடியாக இருந்தது. 2-வது காலாண்டில் மின்சார விற்பனையின் வருவாய் ரூ.2,607.6 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.2,600.8 கோடியாக இருந்தது.

மின்சார விற்பனையின் மூலம் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,154.8 கோடியாக இருந்தது. நிதியாண்டின் முதல் பாதியில் இது ரூ.4834.2 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் 2-வது காலாண்டு லாபம் உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT