முகப்பு
வணிகம்

அடுத்த தலைமுறை டாடா சியரா அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் இன்று அதன் அடுத்த தலைமுறை எஸ்யூவி காரான சியராவை புதிய தொற்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 15 நவம்பர் 2025, 7:27 pm IST
புதிய சியரா கார்
பகிர்:

மும்பை: டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவானது இன்று அதன் அடுத்த தலைமுறை எஸ்யூவி காரான சியராவை புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய டாடா சியரா அதன் தனித்துவமான வடிவமைப்பு தக்க வைத்துக் கொண்டுள்ளதாக மும்பையை தளமாகக் கொண்ட ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடல் காரானது ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹோண்டா எலிவேட் உள்ளிட்ட நடுத்தர அளவிலான எஸ்யூவி கார்களுடன் போட்டியிட உள்ளது.

Advertisement

Advertisement

புதிய டாடா சியரா நவம்பர் 25, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.

டாடா மோட்டார்ஸின் துணைத் தலைவரும் உலகளாவிய வடிவமைப்புத் தலைவருமான மார்ட்டின், இந்த வாகனமானது ஒரு வாழும் சின்னம் என்றார்.

டாடா சியரா முதன்முதலில் 1991ல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டொயோட்டா விற்பனை 39% அதிகரிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.