வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,700.50 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 118.00 புள்ளிகள் அதிகரித்து 84,680.78 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. ஆரம்பத்தில் ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை தற்போது சற்று சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.75 புள்ளிகள் உயர்ந்து 25,933.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
சுமார் 2,056 பங்குகள் உயர்ந்தும் 1,542 பங்குகள் சரிந்தும்192 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
வங்கி, எண்ணெய் & எரிவாயு, மின்சாரம், பொதுத்துறை வங்கி 0.5-1% உயர்ந்துள்ளன, பெரும்பாலும் அனைத்து துறை குறியீடுகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.6% உயர்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.