மும்பை: இரண்டு நாள் ஏற்றத்தைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. உலகளாவிய பலவீனமான போக்குகள் மற்றும் டிசம்பரில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கைகள் முதலீட்டாளர்களிடம் மங்கிவிட்டதாக தெரிகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 444.84 புள்ளிகள் சரிந்து 85,187.84 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 400.76 புள்ளிகள் சரிந்து 85,231.92 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 124 புள்ளிகள் சரிந்து 26,068.15 ஆக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டாடா ஸ்டீல், எச்.சி.எல் டெக், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எடர்னல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்தன.
இந்த வார்த்தில் சென்செக்ஸ் 0.8% மற்றும் நிஃப்டி 0.6% அதிகரித்த நிலையில், பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1.3% சரிந்தன.
எதிர்பார்த்ததை விட சிறப்பாக வெளியான அமெரிக்க பண்ணை சாரா ஊதிய தரவும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் டிசம்பர் மாத வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். செயற்கை நுண்ணறிவு தொடர்பான பங்குகளில் ஏற்பட்ட திடீர் குமிழி குறித்த கவலைகள் உலக சந்தைகளில் முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக பாதித்தது.
ஆசிய சந்தைகள் இன்று சரிந்த நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி 3.79 சதவிகிகமும், ஷாங்காயின் எஸ்.எஸ்.இ. காம்போசிட் குறியீடு 2.45 சதவிகிகமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 2.40 சதவிகிகமும், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 2.38% சரிந்தன.
ஐரோப்பிய சந்தைகள் இன்று சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சரிந்த நிலையில், நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 2.15 சதவிகிதமும் சரிந்தன. எஸ்&பி-500 1.56 சதவிகிதமும், டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 0.84 சதவிகிதம் சரிந்து முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.283.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.824.46 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு 1.51 சதவிகிதம் குறைந்து 62.42 அமெரிக்க டாலராக உள்ளது.
நிஃப்டி-யில் மாருதி சுசுகி, எம்&எம், இன்டர்குளோப் ஏவியேஷன், டாடா மோட்டார்ஸ் பிவி, மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகியவை சரிந்தும் மறுபுறம் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை உயர்ந்தன.
இன்றைய பங்கு சார்ந்த நடவடிக்கையில், நியூயார்க்கின் ஓஸ்வேகோவில் உள்ள நோவெலிஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை கிட்டத்தட்ட 3% சரிந்தன. பிளாக் டீலுக்குப் பிறகு மேக்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 2% சரிந்தன.
கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 1:5 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பதாக தெரிவித்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் ஓரளவு சரிந்தன. சிஎல்எஸ்ஏ 'சிறந்த செயல்திறன்' மதிப்பீட்டைத் தக்கவைத்த பிறகு மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் கிட்டத்தட்ட 1% அதிகரித்தன.
மூலதன திரட்டல் அறிக்கையை நிராகரித்ததால் இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் 2% உயர்ந்தன.
ஜிஎம்ஆர் விமான நிலையம், பாரதி ஏர்டெல், ஐஷர் மோட்டார்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா ஃபைனான்சியல் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டிய நிலையில் மறுபுறம் தெர்மாக்ஸ், கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன், வேதாந்த் ஃபேஷன்ஸ், சிஜி கன்ஸ்யூமர், பாட்டா இந்தியா, கிளீன் சயின்ஸ், எஸ்கேஎஃப் இந்தியா உள்ளிட்ட 220க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார குறைந்தபட்சத்தை எட்டியது.
புதிய பங்கு வெளியீடு
கேபிலரி டெக்னாலஜிஸின் இன்று பட்டியலிடப்பட்ட நிலையில் 5% உயர்ந்து ரூ.606.90 ஆக நிறைவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.