தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை மட்டும் சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து, ரூ. 93,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 11,520-க்கும், ஒரு சவரன் ரூ. 92,160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று காலை கிராம் ஒரு ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 171-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
summary