பங்குச் சந்தை வர்த்தகம் இன்று(செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் தொடங்கிய நிலையில் இறுதியில் சரிந்து முடிந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,008.93 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.
பின்னர் மீண்டும் சரிந்த நிலையில், வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 313.70 புள்ளிகள் குறைந்து 84,587.01 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 74.70 புள்ளிகள் குறைந்து 25,884.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
துறைகளில் உலோகம், பார்மா, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் 0.5 - 1% வரை உயர்ந்தன. அதேநேரத்தில் ஐடி, தொலைத்தொடர்பு, மீடியா, எஃப்எம்சிஜி தலா 0.5% வரை சரிந்தன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றன.
அதானி என்டர்பிரைசஸ், டிரென்ட், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.
வெளிநாட்டு நிதி வெளியேற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காய், ஹாங்காங் ஆகியவை ஏற்றத்தில் நிறைவு பெற்றுள்ளன. ஐரோப்பாவில் பங்குச்சந்தைகள் கலவையான நிலையில் வர்த்தகமாகின. அமெரிக்க சந்தைகள் திங்களன்று உயர்ந்து முடிந்தன.
பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.69 சதவீதம் குறைந்து 62.93 அமெரிக்க டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து 89.20 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.