வணிகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.94,400-க்கு விற்பனையானது.

Chennai

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.94,400-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,240 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த நவ. 24-இல் பவுனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92,160-க்கு விற்பனையானது. தொடா்ந்து, நவ. 25-இல் பவுனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.93,760-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.11,800-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.94,400-க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 2 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,240 உயா்ந்துள்ளது. இதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.176-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயா்ந்து ரூ.1.76 லட்சத்துக்கும் விற்பனையானது.

மதுக் கடை ஊழியா்கள் பணிப் புறக்கணிப்பு

சேறான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மருத்துவ முகாம்

கொலை வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ராமேசுவரம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.08 கோடி

SCROLL FOR NEXT