டாடா மோட்டார்ஸ் 
வணிகம்

கார் விற்பனையில் உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ்

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பரில் நிறுவனத்தின் 60,907 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகின. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையாகும். முந்தைய 2024 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 41,313-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45 சதவீதம் உயர்ந்து 59,667-ஆக உள்ளது. 2024 செப்டம்பரில் இது 41,063-ஆக இருந்தது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு, நவராத்திரி பண்டிகை காரணமாக செப்டம்பரில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை கணிசமாக உயர்ந்தது. இந்தப் போக்கு வரவிருக்கும் மாதங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன வர்தகக வாகனங்களின் விற்பனை 19 சதவீதம் உயர்ந்து 35,862-ஆக உள்ளது. அந்த வகை வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 16 சதவீதம் உயர்ந்து 33,148-ஆக உள்ளது. 2024 செப்டம்பரில் இது 28,631-ஆக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT