செப்டம்பரில் குறைந்தது சில்லறை பணவீக்கம்
காய்கறிகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருள்கள், பழங்கள், பயறு வகைகள், தானியங்கள், முட்டை, எரிபொருள் போன்றவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 1.54 சதவீதமாக சரிந்துள்ளது.
புது தில்லி: காய்கறிகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருள்கள், பழங்கள், பயறு வகைகள், தானியங்கள், முட்டை, எரிபொருள் போன்றவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 1.54 சதவீதமாக சரிந்துள்ளது. இது 2017 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய மிகக் குறைந்த பணவீக்கம்.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆகஸ்டில் 2.07 சதவீதமாக இருந்த சில்லறை விலை பணவீக்கம், செப்டம்பரில் 1.54 சதவீதமாக சரிந்தது. உணவு பணவீக்கம் நான்காவது மாதமாக எதிர்மறையாக இருந்து, நுகர்வோர் உணவு விலை குறியீடு (சிஎஃப்பிஐ) ஆண்டுக்கு ஆண்டு 2.28 சதவீதம் சரிந்தது.
Advertisement
Advertisement
கிராமப்புறங்களில் உணவு பணவீக்கம் 0.70 சதவீதத்திலிருந்து 2.17 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 0.53 சதவீதத்திலிருந்து 2.47 சதவீதமாகவும் சரிந்தது.
கிராமப்புற சில்லறை விலை பணவீக்கம் ஆகஸ்டில் 1.69 சதவீதமாக இருந்து, செப்டம்பரில் 1.07 சதவீதமாகக் குறைந்தது. நகர்ப்புறங்களில் அது 2.47 சதவீதத்திலிருந்து 2.04 சதவீதமாகச் சரிந்தது.
எனினும், ஆகஸ்டில் 3.09 சதவீதமாக இருந்த வீட்டு வசதி பணவீக்கம் செப்டம்பரில் 3.98 சதவீதமாக உயர்ந்தது. கல்வி பணவீக்கம் 3.60 சதவீதத்திலிருந்து 3.44 சதவீதமாகக் குறைந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.